நாசாவின் ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது.! - Seithipunal
Seithipunal


நாசாவின் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் ஆளில்லா ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம், நிலாவை ஆராய்வதற்கும், நிலாவிற்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நோக்கத்துடன் கடந்த நவம்பர் 16ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

மேலும் நவம்பர் 25ஆம் தேதி முதல் நிலவை ஆராய்ச்சி செய்ய தொடங்கிய விண்கலம், மிக அருகில் நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்து அனுப்பியது. இதையடுத்து தனது ஆராய்ச்சி பணிகளை நிறைவு செய்த ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையிலிருந்து விலகி நேற்று முன்தினம் பூமிக்கு வரத் தொடங்கியது.

இந்நிலையில் சுமார் 26 நாட்கள் நிலவின் சுற்றுவப்பட்டப்பாதையில் சுற்றி வந்த ஓரியன் விண்கலம் கலிஃபோர்னியாவிற்கு அருகே உள்ள பசிபிக் பெருங்கடலில் வெற்றிகரமாக தரையிறங்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NASA Artemis 1 Orion spacecraft successfully returns to Earth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->