விண்வெளி ஆராய்ச்சிக்கான புது ஒப்பந்தம்.! ரஷ்யாவுடன் கைகோர்த்த நாசா.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன.

இந்நிலையில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மற்றும் ரஷ்யா விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதனிடையே ரஷ்யா உக்ரைன் இடையேயான போரால் அமெரிக்கா-ரஷ்யா இடையேயான விண்வெளி ஆய்வுப் பணிகள் தொய்வு ஏற்பட்ட நிலையில், பல நாட்களுக்கு பின் மீண்டும் விண்வெளி துறையில் இருதரப்பு உறவு சுமூகமாகியுள்ளது.

நாசா மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் இடையேயான புதிய ஒப்பந்தத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குக்கான முதல் ஒருங்கிணைந்த விண்கலங்கள் செப்டம்பர் மாதம் முதல் விண்வெளிக்கு அனுப்பப்படும்.

மேலும் இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க விண்வெளி வீரர்கள் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்திலும், ரஷ்யா விண்வெளி வீரர்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட விண்களத்திலும் பறக்க அனுமதிக்கப்படுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NASA Russian space agency sign deal for new reasearch


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->