கல்பனா சாவ்லா மரணத்தால் பயந்த நாசா...சுனிதா வில்லியம்ஸ் நிலை?
NASA scared of Kalpana Chawlas death Sunita Williams condition
கடந்த ஜூன் 5 ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர்.
அங்கு அவர்கள் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், சுனிதா மற்றும் புட்ச் ஆகியோர் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு எட்டு நாட்களில் பூமிக்க திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இருவரையும் பூமிக்கு அழைத்த வர இருந்த ஸ்டார் லைனர் விண்கலம் தற்போது இவர்கள் இன்றி வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 6.04 மணிக்குப் பூமியை நோக்கிய பயணத்தைத் தொடங்கி, மறுநாள் 12.03 மணிக்கு பூமியை அடையும் என்று நாசா அறிவித்துள்ளது.
இந்நிலையில், பூமிக்குத் திரும்ப உள்ள ஸ்டார் லைனர் விண்கலத்திலேயே ஏன் இவர்கள் இருவரையும் அழைத்து வர வில்லை என்பாத்து குறித்து நாசா விளக்கம் அளித்துள்ளது. அதில், இதுபோன்ற பயணத்தின்போது விண்கலம் வெடித்து உயிரிழந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவின் மரணமே தற்போது சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பழுதுபட்ட விண்கலத்தில் அழைத்து வர வேண்டாம் என்ற முடிவை நாசா எடுக்க காரணமாக அமைத்துள்ளதாகவும், இதனால் அடுத்த வருடம் பிப்ரவரியில் இருவரையும் பூமிக்கு அழைத்து வரும் முடிவுக்கு நாசா தள்ளியுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
English Summary
NASA scared of Kalpana Chawlas death Sunita Williams condition