இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நடிகைக்கு "தேசிய மனிதநேய விருது"..!
National Humanitarian Award for Indian origin actress in America
அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் கலைத்துறை மூலமாக மக்களிடையே மனிதநேயம் பற்றிய சிந்தனையை மொழிகள், தத்துவம் மற்றும் பாடல்கள் வழியாக ஊக்குவிக்கும் சிறந்த மனிதர்களுக்கு அமெரிக்காவின் தேசிய மனிதநேய விருது ஜனாதிபதியால் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டிற்கான மனிதநேயத்தை மக்களிடையே உணர்த்தும் சிறந்த மனிதராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை மிண்டி கலிங்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று வாஷிங்டனில் நடைபெற்ற விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசிய மனிதநேய விருதை வழங்கினார்.
இந்திய-அமெரிக்க நடிகையும், தயாரிப்பாளருமான மிண்டி கலிங்கு திறமையான திரைக்கதை எழுத்தாளர், நகைச்சுவையாளர். இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 43 வயதான மிண்டி கலிங்கு தனது நகைச்சுவை பேச்சால் தொலைக்காட்சிகளிலும், புத்தகங்களிலும் அனைவராலும் நேசிக்கப்பட்டவர் என்றும், அவரது பணி மேலும் அடுத்த தலைமுறைக்கும் தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
National Humanitarian Award for Indian origin actress in America