அமெரிக்கா : நடுவழியில் நிலை தடுமாறிய விமானம் - ஐந்து பேர் படுகாயம்.!
near america five peoples injury for flight crashes in sky
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் இருந்து சென்று கொண்டிருந்தது.
இந்த விமானம் அமெரிக்கா நாட்டின் பக்கத்து நாடான மெக்சிகோவில் உள்ள கான்கன் நகருக்கு மேலே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறியது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.
இதில், இரண்டு பயணிகள் மற்றும் மூன்று விமான பணியாளர்கள் என்று மொத்தம் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து விமானம், இயல்பு நிலை திரும்பிய உடன் ஹூஸ்டன் நகரை நோக்கி தொடர்ந்து சென்றது.
இதைத்தொடர்ந்து, விமானம் ஹூஸ்டன் நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவ குழு படுகாயம் அடைந்த ஐந்து பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா நாட்டிலுள்ள பீனிக்ஸ் நகரில் இருந்து ஹவாய் தீவுக்கு சென்றுகொண்டிருந்த பயணிகள் விமானம் நடுவானில் நிலை தடுமாறியதில் 36 பேர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.
English Summary
near america five peoples injury for flight crashes in sky