குஜராத்தில் பரபரப்பு.! ஜீவனாம்சம் கொடுக்காமல் இருக்க 2 வது மனைவியை கொன்ற கணவர் கைது.!  - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் ஸ்ரீநந்த நகர் பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22-ந்தேதி பெண்ணின் உடல் ஒன்று கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், "கொலை செய்யப்பட்ட அந்த பெண் அந்த பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த மணீஷா தூதெல்லா என்பது தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து, போலீசார் கொலைகாரர்களை தேடி வந்தனர். அப்போது, கலீலுதீன் சையது என்ற தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை போலீசார் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர். 

அதில், பெண்ணைக் கொலை செய்ததை அந்த நபர் ஒப்பு கொண்டார். இதைக்கேட்டு ஆச்சரியமடைந்த போலீசார் விசாரணையை தீவிரபடுத்தியதில், பலத் அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன. 

அதாவது, "இந்த கொலையை செய்யுமாறு மணீஷாவின் முன்னாள் கணவரான ராதாகிருஷ்ண மதூக்கர் தூதெல்லா திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. கடந்த 2015-ம் ஆண்டு மனைவி மணீஷாவிடம் இருந்து மதூக்கர் பிரிந்து சென்றுள்ளார். 

இந்நிலையில், தனியாக வசித்த மணீஷாவை தீர்த்து கட்டுவதற்கு, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் கொண்ட கூலிப்படையை வாடகைக்கு அமர்த்தி உள்ளார் மதூக்கர். அதற்கு கூலியாக அவர்களிடம் ரூ.1.5 லட்சம் பேரம் பேசியுள்ளார். 

அதன் பிடி, அவர்கள் இருவரும் மணீஷாவை கொலை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து, போலீசார் நேற்று மதூக்கரை கைது செய்தனர். அதன் பிறகு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் கொலை செய்த விவரங்களை ஒப்பு கொண்டுள்ளார். 

இதையடுத்து, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதில், நீதிமன்றம் அவரை14 நாட்கள் போலீஸ் காவலில் வைப்பதற்கு  உத்தரவிடப்பட்டு உள்ளது. 3 திருமணங்களை செய்த மதூக்கர் பிரிந்து வாழும் இரண்டாவது மனைவிக்கு மாதந்தோறும் ரூ.40 ஆயிரம் ஜீவனாம்சம் கொடுத்து வந்துள்ளார்.

மேலும், ஜீவனாம்சம் கொடுக்காமல் இருப்பதற்காக இந்த கொலையை செய்திருக்க கூடும் என்று மதூக்கர் மீது போலீசார் சந்தேகபட்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near gujarat husband arrested for wife kill


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->