தேர்வில் மெஸ்ஸியை "பிடிக்காது" என்று பதில் எழுதிய மாணவி - வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆண்டிறுதித் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மலையாள மொழித்தேர்வு நடைபெற்றது.

இந்த மொழித்தேர்வில், "அர்ஜென்டினா கால்பந்து சூப்பர் ஹீரோ லியோனல் மெஸ்சியின் வாழ்க்கை வரலாறு குறித்து எழுதவும்' என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 

அதற்கு மலப்புரம் மாவட்டத்தில் உள்ள சாஸ்தா ஏ.எல்.பி. பள்ளி மாணவி ஒருவர், "நான் பிரேசில் அணியின் ரசிகை. எனக்கு நெய்மரைத்தான் பிடிக்கும். மெஸ்சியை பிடிக்காது. அதனால், இந்த கேள்விக்கு நான் பதில் எழுத மாட்டேன்" என்று எழுதியுள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர் ஒருவர் அந்த விடையை புகைப்படம் எடுத்து பள்ளியின் வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டுள்ளார். அதன் மூலம் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அந்த மாணவி தெரிவித்ததாவது:- "வினாத்தாளில் மெஸ்ஸி குறித்த கேள்வியை பார்த்தவுடன் பதிலளிக்காமல் விட்டுவிடலாம் என்று தான் நினைத்தேன்.

எனக்கு மெஸ்சியைப் பிடிக்காது என்பதை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவும், மனதில் உள்ளதை வெளிப்படையாகக் கூற வேண்டும் என்பதற்காகவும் அவ்வாறு எழுதினேன். 

சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த உலக கால்பந்து போட்டியில் நெய்மரின் பிரேசில் அணி தோல்வியடைந்தபோது மிகவும் வருத்தப்பட்டேன். இனி வரும் போட்டியில் உலகக் கோப்பையை பிரேசில் அணி தான் வெல்லும்" என்றுத் தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near kerala 4th class student wrote about messi in answer sheet photo viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->