நடுவானில் மோதிய பறவை.. புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்..!
Nepal plane return back to airport as bird hit
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்திலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற நேபாள ஏர்லைன்ஸ் விமானம் பறவை மோதியதால் மீண்டும் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திற்கு திரும்பவும் சூழ்நிலை ஏற்பட்டது. நேற்று மதியம் 1.45 மணிக்கு நேபாள ஏர்லைன்ஸ் ஆர்.ஏ-225 விமானம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது விமானத்தில் இருந்த பயணிகள் பெரும் சத்தம் கேட்டதாக விமான பணியாளர்களிடம் தெரிவித்தனர். இந்நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி புறப்பட்ட 25 நிமிடத்திலேயே விமானம் மீண்டும் திரிபுவன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இதையடுத்து விமானத்தை ஆய்வு செய்த தொழில்நுட்ப அலுவலர்கள், நடுவானில் பறவை மோதியதில் விமானத்தின் வலது இறக்கையில் உள்ள கத்திகள் சேதமடைந்துள்ளதை கண்டறிந்தனர். இதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விமான நிலையம் செய்தி தொடர்பாளர் சிதாவுலா தெரிவித்துள்ளார்.
English Summary
Nepal plane return back to airport as bird hit