உலக பிரபஞ்ச அழகி போட்டியில் புதிய அறிவிப்பு ..! - Seithipunal
Seithipunal


உலக பிரபஞ்ச அழகி போட்டியில் அடுத்தாண்டு முதல் திருமணமான பெண்கள் மற்றும் தாய்மார்களும் பங்கேற்கலாமென அழகி போட்டியை நடத்தும் அமைப்பு அறிவித்துள்ளது.

அடுத்தாண்டு மடகாஸ்கர் மற்றும் ரோமானியாவில் 72வது மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டிகள்  நடைபெறவுள்ளது. இதுவரை வரை பிரபஞ்ச அழகி போட்டியில், திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை பெற்றுகொள்ளாத பதினெட்டு வயது முதல் இருபத்தி எட்டு வயது வரை உள்ள பெண்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அழகி போட்டியில் திருமணம் செய்து கொள்ளாத பெண்ணாகவும், குழந்தை பெற்றுகொள்ளாதவர்களாக இருப்பவர்களும் பட்டத்தை வெல்ல, வேண்டுமென எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், போட்டியை நடத்தும் அமைப்பு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த செய்தியில்,

 "பெண்கள் தங்கள் வாழ்க்கையை நிர்வகிக்கும் திறமையை கொண்டிருக்க வேண்டும். ஒரு பெண்ணின் தனிப்பட்ட முடிவுகள் அவர்களின் வெற்றிக்கு தடையாக இருக்க கூடாது என நாங்கள் அனைவரும் நம்புகிறோம்' என தெரிவித்துள்ளது.

2020ல் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஆண்ட்ரியா மெசா, புதிய அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்த புதிய அறிவிப்பு பற்றி அவர் கூறுகையில், 

'நான் உண்மையாக இந்த மாற்றத்தை விரும்புகிறேன். சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை போன்று, முன்பு ஆண்கள் மட்டுமே ஆக்கிரமித்திருந்த தலைமை பதவிகளை இப்போது பெண்களும் ஆக்கிரமிப்பதை போல, இதுவே போட்டியாளர்கள் மாற்ற வேண்டிய நேரமிது. குடும்ப பெண்களுக்கும் பாதையை திறந்துவிட வேண்டிய நேரமிது.

இந்த மாற்றத்தை சிலர் எதிர்க்க கூடும். ஏனெனில், அவர்கள் திருமணமாகாத இளம்பெண்களை மட்டுமே விரும்புவராக இருப்பர்.

வெளிப்புற தோற்றத்தில் இருந்து பெண்கள் எப்போதும் கச்சிதமாக இருக்க வேண்டும். வெளியில் இருந்து அணுக முடியாதவர்களாக இருக்க வேண்டுமென விரும்புவர்கள். ஒன்று பாலியல் ரீதியானது. மற்றொன்று எதார்த்தம் இல்லாதது.'

என்று அவர் கூறினார்.

ஆண்ட்ரியா மெசா, பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற சில மணி நேரங்களுக்கு பின், ஏற்கனவே திருமணம் ஆனவர் என சமூகவலைதளங்களில் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

அதற்கு காரணம் அவரது இன்ஸ்டாவில் மெசா திருமண ஆடையில் ஒருவருடன் நிற்கும் புகைப்படம் இருந்தது தான். அதற்கு பிறகு, மெக்சிகோ சுற்றுலா நிறுவனம் ஒன்றிற்காக, அம்பாசிடராக போட்டோஷீட் நடத்தியதாக அழகி போட்டி அமைப்பு விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New announcement on Miss Universe pageant ..!


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->