அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு..எங்கு நடக்குறது தெரியுமா?
Next BRICS Summit - Official Announcement Do you know where it's happening?
2025-ம் ஆண்டு வரை வளரும் பொருளாதாரங்களின் கூட்டமைப்பிற்கு பிரேசில் தலைமை தாங்குகிறது.இந்தநிலையில் அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜூலை 6-7 தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் என்று பிரேசில் அறிவித்துள்ளது.
இது குறித்து பிரேசில் வெளியிட்டுள்ள செய்தியில்: உலகளாவிய தெற்கு நாடுகளிடையே உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் பிரேசில் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2009-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பு பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளால் இணைந்து நிறுவப்பட்டது என்றும் அதன் பிறகு, 2010-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இந்த அமைப்பில் இணைந்தது என தெரிவித்துள்ளது.
அதேபோல கடந்த ஆண்டு, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் இந்த கூட்டமைப்பு விரிவடைந்தது என்றும் சவுதி அரேபியாவும் இந்த அமைப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என பிரேசில் தெரிவித்துள்ளது .
மேலும் இதுதவிர துருக்கி, அஜர்பைஜான் மற்றும் மலேசியா முறையாக உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளன என்றும் மேலும் பல நாடுகள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன என்றும் பிரேசில் தெரிவித்துள்ளது.இதையடுத்து அடுத்த பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜூலை 6-7 தேதிகளில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் என்று பிரேசில் அறிவித்துள்ளது.
English Summary
Next BRICS Summit - Official Announcement Do you know where it's happening?