உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் பிறந்த தினம்.!! - Seithipunal
Seithipunal


நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் :

உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் 1473ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி போலந்து நாட்டின் தோர்ன் நகரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் மைகொலாஜ் கோபர்நிக். பல்கலைக்கழகத்தில் படித்தபோது, நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் என்று மாற்றிக்கொண்டார்.

எந்த தொலைநோக்கி கருவியும் இல்லாமலேயே இவரது ஆராய்ச்சிகள் நடைபெற்றன. வானியல் குறித்து அதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த புவி மையக்கோட்பாட்டை மறுத்து சூரிய மையக்கோட்பாட்டை வகுத்தார்.

இவரது காலத்துக்கு பிறகே இவரது கோட்பாடுகளை கலீலியோ உள்ளிட்ட பிரபல வானியலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆன் தி ரெவல்யூஷன் ஆஃப் தி ஹெவன்லி ஸ்பியர்ஸ் என்ற நூலில் தனது ஆய்வுகள் குறித்து எழுதியுள்ளார்.

வானியல் ஆய்வாளராக மட்டுமல்லாமல், சட்ட நிபுணர், மருத்துவர், பழங்கலை அறிஞர், மதகுரு, ஆளுநர், அரசு தூதர் என பல துறைகளில் தனது பங்களிப்பை வழங்கிய நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் 1543ஆம் ஆண்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nicolaus copernicus birthday 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->