இந்தியாவிற்கு நாடு கடத்தப்படும் நீரவ் மோடி..!! மனித உரிமை நீதிமன்றத்தை நாட முடிவு..!!
Nirav Modi to be extradited to India from London
மும்பையைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்றதை திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்று விட்டார். பின்னர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து நீரவ் மோடி மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருப்பதால் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு இரண்டு வார காலம் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் நீரவ் மோடியின் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக நீரவ் மோடி இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் கடைசி வாய்ப்பாக ஐரோப்பியம் மனித உரிமை நீதிமன்றத்தில் முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Nirav Modi to be extradited to India from London