நியூசிலாந்து : இந்தியா மூன்றாவது பொருளாதார நாடக உருமாறும் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு..! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆக்லாந்துபகுதியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, "கொரோனா காலக்கட்டத்தின் போது, தடுப்பூசி தயாரிப்புகளில் மிக பெரிய உற்பத்தியாளர்களில் ஒருவராக நாம் இன்றளவும் இருந்து வருகிறோம். 

எங்களது சொந்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்திய அதே சூழலில், மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற தீவிர முடிவையும் நாங்கள் எடுத்தோம். அதன்படி, இலவச தடுப்பூசிகளை பெற முடியாத நிலையில் இருந்த அண்டை நாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தோம்.

தற்போது, ரஷியா-உக்ரைன் போரால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. மேலும், ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கையிலெடுத்து கொண்டதும் ஒரு பெரிய விவாதத்திற்குரிய விசயமாக உள்ளது.

5-வது மிக பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியா, இந்த பத்து ஆண்டுகால முடிவில், 3-வது மிக பெரிய பொருளாதார நாடாக உருமாறும்" என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

niyuziland indian foreign minister jaisangar speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->