வடக்கு பிரான்ஸ் - ஜெர்சி தீவில் குண்டுவெடிப்பு - மூன்று பேர் பலி.!  - Seithipunal
Seithipunal


வடக்கு பிரான்சி நாட்டில் உள்ள கடலோர பகுதியில் ஜெர்சி தீவு அமைந்துள்ளது. இந்த தீவின் தலைநகர் செயிண்ட் ஹெலியரில் துறைமுகம் அருகே அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தக் குண்டு வெடிப்பு குறித்து, ஜெர்சி மாகாணத்தின் தலைமை காவல் அதிகாரி ராபின் ஸ்மித் தெரிவித்ததாவது, "இந்த குண்டுவெடிப்பில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேர் வரை காணாமல் போயுள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்து மீட்பு குழுவினர் தொடர்ச்சியாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 20 முதல் 30 பேர் வரை கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இந்த குண்டுவெடிப்பின் போது, கட்டிடத்தின் வழியாக நடந்து சென்றவர்களில் காயமடைந்த இரண்டு பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதற்கான காரணம் எதுவும் தெரிய வரவில்லை. இதுகுறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

north franze bomb broke in jersi island three peoples died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->