தென்கொரியாவுடனான தகவல் தொடர்பை துண்டித்த வடகொரியா..! - Seithipunal
Seithipunal


கிழக்கு ஆசிய நாடான தென்கொரியா, அமெரிக்காவுடன் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுவதை கண்டித்து வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. மேலும் அமெரிக்காவுடனான போர் பயிற்சியை நிறுத்துமாறு தென்கொரியாவை வடகொரியா எச்சரித்து வருகிறது.

இந்நிலையில் தென்கொரியாவுடனான நேரடி தகவல் தொடர்பை துண்டித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வடகொரியா வெளியிட்ட தகவலில், கடந்த நான்கு நாட்களாக வடகொரியாவின் அழைப்பை தென்கொரியா ஏற்கவில்லை என்றும், அமெரிக்காவின் கை பொம்மையாக தென்கொரியா செயல்பட்டு அண்டை நாட்டிற்கு துரோகம் விளைவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, வடகொரியாவின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து தென்கொரியா வெளியிட்ட அறிக்கையில், வடகொரியா வேண்டுமென்றே தகவல் தொடர்பை துண்டித்துள்ளதாகவும், தங்களை முறையாக தொடர்பு கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளது.nஇதற்கு முன்பாக கடந்த 2020ஆம் ஆண்டு வடகொரியா, தென்கொரியாவுடனான தகவல் தொடர்பை துண்டித்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea cut off communication with southkorea


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->