தென்கொரியா-ஜப்பான் உச்சிமாநாடு: நீண்ட தூர ஏவுகணையை வீசிய வடகொரியா.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவும், தென்கொரியாகவும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபடுவதை எதிர்த்து, அண்டை நாடான வடகொரியா அணு ஆயுத மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதனை செய்து வருகிறது. மேலும் அமெரிக்கா மற்றும் தென் கொரியா கடந்த 13ஆம் தேதி தொடங்கிய 'சுதந்திரக் கேடயம்'  போர் பயிற்சியை எதிர்த்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவி வடகொரியா தனது எதிர்ப்பை தெரிவித்தது.

இந்நிலையில் ஜப்பான் மற்றும் தென்கொரியா இடையேயான உச்சி மாநாடு ஜப்பானில் இன்று நடைபெற உள்ளது. இதில் தென்கொரியா அதிபர் யூன் சுக்-இயோல், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து வர்த்தக உறவுகளை புதுப்பிக்கவும், எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவது பற்றி விவாதிக்க உள்ளார்.

இதனிடையே மாநாடு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக தென் கொரியா அரசு வெளியிட்ட அறிக்கையில், காலை 7.10 மணிக்கு வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் சுனான் பகுதியில் இருந்து 1000 கீ.மி வரை சென்று தாக்கும் நீண்ட தூர ஏவுகணையை வீசி சோதனை செய்துள்ளதாகவும், எல்லைப் பகுதிகளில் வடகொரியாவின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

North Korea fires long range missile ahead of South Korea Japan summit


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->