ரஷ்யா வெற்றியடைய ஒரு லட்சம் வீரர்களை அனுப்ப தயார் - வடகொரியா
North Korea ready to give 1 lakh soldier to russia
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் பிப்ரவரி 24ந்தேதி தொடங்கி 5 மாதங்களையும் கடந்து நீடித்து வருகிறது. இப்போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
மேலும் ரஷ்யாவை கண்டித்து உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி மற்றும் நிதி உதவி ஆகியவற்றை செய்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா வெற்றியடைய ஒரு லட்சம் போர் வீரர்களை அனுப்ப தயாராக உள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
இதையடுத்து உக்ரைனுக்கு அமெரிக்கா அதி நவீன பீரங்கிகளை வழங்க முடிவு செய்துள்ளதால் அதனை எதிர்கொள்ள வடகொரியா வீரர்களின் அனுபவம் மற்றும் போரிடும் திறனை ரஷ்யா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ரஷ்யாவில் கருத்துக்கள் வெளியாகி உள்ளன.
மேலும் போரில் ரஷ்யா வெற்றி பெற்றால் உக்ரைன் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டான்பாஸ் பகுதிக்கு 1000க்கும் மேற்பட்ட பணியாளர்களை அனுப்ப வடகொரியா தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
English Summary
North Korea ready to give 1 lakh soldier to russia