ஒரே நாளில் 2 ஏவுகணைகளை வடகொரியா சோதனை - தென்கொரியா - Seithipunal
Seithipunal


ஒரே நாளில் 2 ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆசிய நாடான வடகொரியா மேற்கொண்டு வரும் அணு ஆயுத சோதனையை கண்டித்து அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள் வடகொரியா மீது பொருளாதார தடையை விதித்தன.

மேலும்  அமெரிக்கா மற்றும் தென்கொரியா நாடுகள்    வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்ற முயற்சித்து வரும் நிலையில், பொருளாதார தடைகளை  திரும்ப பெறும் வரை அணு ஆயுதங்களை கைவிடப்போவதில்லை என்று வடகொரியா உறுதியாக உள்ளது

இதையடுத்து தென்கொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான கூட்டுப் போர்ப்பயிற்சி ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை தென் கொரியாவில் நடைபெற உள்ளது என இரு நாடுகளும் அறிவித்திருந்து.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் வடகொரியா 2 ஏவுகணைகளை சோதித்துள்ளதாக தென்கொரியா  தெரிவித்துள்ளது.

மேலும் வடகொரியா தலைநகர் பியாங்யாங் அருகே கடலில் இருந்து 2 கப்பல் ஏவுகணைகளை ஏவியதை கண்டறிந்தோம். இந்த சோதனை குறித்து அமெரிக்கா மற்றும் தென்கொரிய அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர் என்று தென்கொரியா ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea tests 2 cruise missiles in one day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->