ரஷியாவுடன் இணைந்த வடகொரிய ராணுவம்! உக்ரைன் போரில் வடகொரிய1200 ராணுவவீரர்கள்! - Seithipunal
Seithipunal


உக்ரைன்-ரஷியா இடையேயான போர் தொடர்கதையாக நீண்டுகொண்டிருக்கும் இந்த நேரத்தில், ரஷியாவிற்கு வடகொரியா ஆதரவு அளிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இப்போரின் திடீர் மாற்றமாக, வடகொரியா, ரஷியாவிற்கு உதவியாக தங்களின் 12,000 ராணுவ வீரர்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம், உக்ரைன் போருக்கு புது பரிமாணங்களை சேர்க்கும் என ராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

வடகொரியா அண்மையில் 3,000 ராணுவ வீரர்களை ரஷியாவிற்கு அனுப்பியிருப்பதாக தென்கொரிய பாராளுமன்ற உறுப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இதை தொடர்ந்து இரு நாட்களுக்குள் வடகொரிய ராணுவத்தை ரஷியா, உக்ரைன் போரில் பயன்படுத்தும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

வடகொரிய ராணுவத்தின் ஆதரவு, ரஷியாவின் போராட்டவலிமையை மேலும் வலுப்படுத்தும் என்ற அச்சத்தைக் கொண்டுவந்துள்ளது. 

மேற்கத்திய நாடுகள் இந்த மாற்றத்தை புவிசார் அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கின்றன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு மாற்றங்களை உருவாக்கக்கூடிய இச்செயல், வடகொரிய ராணுவத்தின் மீதான கண்காணிப்பை அதிகரிக்கச் செய்யும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korean army allied with Russia 1200 North Korean soldiers in Ukraine war


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->