சிவப்பு நிற உதட்டு சாயத்திற்கு 'நோ' ... வடகொரிய அரசு வினோத தடை.!
North Korean govt ban Red Lip stick
வடகொரியா நாட்டில் பல்வேறு வினோதமான சட்டங்களை அமல்படுத்துவது தொடர் கதையாக உள்ளது. ஆசிய நாட்டின் உச்ச தலைவரான கிம் ஜாங் உன்னின், கடைபிடிக்க கடினமான பல்வேறு வினோதமான விதிகளை விதிக்கிறார்.
ஆனால் நாட்டு மக்கள் இந்த சட்டங்களை கடைபிடிக்க வேண்டும். அதுபோல் ஃபேஷன் தொடர்பான சட்டங்களை பொதுமக்கள் பின்பற்ற தவறினால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.
வடகொரியாவில் உலக அளவில் பிரபலமான அழகு சாதன பிராண்டுகளில் பெரும்பாலானவை தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகொரியாவில் வசிக்கும் பெண்கள் சிவப்பு நிற உதடு சாயத்தை பூசிக்கொள்ள அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
North Korean govt ban Red Lip stick