ஜப்பான் எல்லைக்குள் வடகொரியா ஏவுகணை சோதனை.! மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
North Korean Missile Test Within Japan
வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தொடர்ந்து சோதனை செய்து உலக அச்சுறுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
இந்த கூட்டுப்போர் பயிற்சியை ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கை என கண்டனம் தெரிவித்த வடகொரியா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை செய்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 23 ஏவுகணைகளை தென்கொரியா எல்லையை நோக்கி வீசி வடகொரியா அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென்கொரியாகும் ஏவுகணை வீசியதால் கொரியா தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று வடகொரியா வீசிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஜப்பான் கடல் எல்லையை கடந்து பசிபிக் கடலில் விழுந்தது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்ட நிலையில், ஜப்பான் பிரதமர் அலுவலகம் அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
மேலும் தங்கள் எல்லைக்குள் ஏவுகணையை வீசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜப்பான், மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
English Summary
North Korean Missile Test Within Japan