ஜப்பான் வான் வழியில் பறந்த வடகொரியா ஏவுகணை! இரு நாடுகளுக்கு இடையே பதற்றம்!
North Korean missile that flew in the air of Japan
வடகொரிய ஏவுகணை சோதனை 10 நாட்களில் 5 முறை ஜப்பானின் வான் வழியில் நிகழ்ந்துள்ளது!
ஜப்பானின் வான்வழி பகுதியில் வட கொரியா அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணையை செலுத்தியுள்ளது. ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு ஜப்பானிய நிலப்பரப்பைக் கடந்து பறந்து சென்றதால் ஜப்பான் அரசு பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளது.
வட கொரிய ஏவுகணை ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இருந்து வடக்கு பகுதியில் 4,600 கிமீ (2,850 மைல்) தூரம் கடந்து கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த பத்து நாட்களில் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பானின் இராணுவத் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பரப்பில் இது ஐந்தாவது சம்பவமாக கூறப்படுகிறது. கடந்த வாரம், மூன்று நாடுகளும் மும்முனை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சிகளை மேற்கொண்டன.அதில் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலும் அடங்கும். இதன் காரணமாக வடகொரியா இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வரலாம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் யசுகாசு ஹமாடா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "ஏவுகணையை சுட்டு வீழ்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை வடகொரியாவில் இருந்து மீண்டும் மீண்டும் ஏவுகணை ஏவப்படுவதை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் தனது பாதுகாப்பை பலப்படுத்த விரும்புகிறது. எதிர் தாக்குதல் திறன் உள்ளிட்ட எந்த செயல்பாடுகளையும் நிராகரிக்காது. நட்பு நாடுகளின் ஒத்துழைப்பை ஜப்பான் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஹிரோகாசு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது "வட கொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணைகளை ஏவி வருகிறது. இத்தகைய செயல் ஜப்பான் மற்றும் சர்வதேச நாடுகளின் அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்துகிறது. மேலும் ஜப்பான் உட்பட ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளுக்கும் கடுமையான சவாலாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.
இந்த சோதனையின் மூலம் ஜப்பான் வடகொரியா இடையே பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. மேலும் வடகொரியாவின் செயலுக்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன
English Summary
North Korean missile that flew in the air of Japan