1000 நாய்களை கொடூரமாக கொலை செய்த முதியவர்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!
Old man killed 1000 dogs in South Korea
உலக அளவில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய், பூனை மேலும் சில உயிரினங்களை வளர்த்து வருகின்றனர். என்னதான் பல உயிரினங்களை வளர்த்து வந்தாலும் நாய்கள் தான் முக்கிய செல்லப்பிராணியாக இருக்கிறது.
அந்த வகையில் செல்லப் பிராணிகளை உள்நாடு, வெளிநாடு என எங்கிருந்தாலும், எவ்வளவு விலை இருந்தாலும் செல்லப்பிராணி பிரியர்கள் அதனை விரும்பி வாங்குகின்றனர்.
அவ்வாறு வளர்க்கப்படும் நாய், பூனை கிளி போன்ற செல்லப்பிராணிகள் என்பதையும் தாண்டி அவை குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவே மாறிவிடுகிறது.
ஒரு பக்கம் செல்லப்பிராணி பிரியர்கள் இருந்தாலும் சிலர் செல்ல பிராணிகளை கொடுமை செய்பவர்களும் உள்ளனர். அந்த வகையில் தென்கொரியா நாட்டில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர் சுமார் 1000 நாய்களை தன் வீட்டில் அடைத்து வைத்து அவைகளுக்கு உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி சாகடித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள உள்ளூர் வாசி ஒருவர் தனது வளர்ப்பு நாயை காணவில்லை என புகார் அளித்ததை தொடர்ந்து இந்த விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது. இதனையஎடுத்து உலகம் முழுவதும் உள்ள விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் முதியவருக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Old man killed 1000 dogs in South Korea