ரஷ்யா: 3 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு.. தன்னைத்தானே சுட்டுக்கொண்ட முதியவர்.! - Seithipunal
Seithipunal


ரஷ்யாவில் 66 வயது முதியவர் 3 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

ரஷ்யாவின் தெற்கு நகரமான கிரிம்ஸ்கில் நேற்று 66 வயது முதியவர் ஒருவர் ரோட்டோரம் நடந்து சென்றபோது திடீரென அவர் தான் கையில் வைத்து இருந்த துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுற்றுள்ளார். அவரது இந்த வெறிச்செயலை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 61 வயது முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து இந்த துப்பாக்கி சூடு நடத்திய முதியவரும் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய முதியவர் யார்? எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகிய துப்பாக்கியால் சுடும்காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man shoots 3 dead in Russia later kills self


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->