பாகிஸ்தான் || சீனர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி.! 2 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் சீனர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தானில் வசிக்கும் சீனர்கள் மீது சமீப காலங்களாக தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் கராச்சி நகரில் சதார் பகுதியில் உள்ள பல் கிளினிக் ஒன்றில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். 

இந்த துப்பாக்கி சூட்டில் சீனர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 2 பேர் படுகாயமடைந்ததாக நிலையில் சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஆசாத் ரசா தெரிவித்துள்ளார். 

இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ராணா சனாவுல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் கராச்சி நகரில் உள்ள கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் வேன் ஒன்றின் மீது பெண் ஒருவர் நடத்திய தாக்குதலில் 3 சீனர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One killed in firing on Chinese in Pakistan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->