துருக்கி நிலநடுக்கம் : ஒருவாரம் துக்கம் அனுசரிக்க அரசு முடிவு.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு ஐரோப்பிய நாடான துருக்கி-சிரியாவின் எல்லை பகுதியில் நேற்று மற்றும் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 2500 க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலநடுக்கத்தில் சிரியாவில் மட்டும் 968 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. நேற்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதற்கான மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, மேலும் மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. 

துருக்கி-சிரியா எல்லைப்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அண்டைநாடுகளிலும் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த  நிலநடுக்கம் கடந்த 1939-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் உயிரிழப்புகள் நான்காயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பைத் தொடர்ந்து, நாட்டில் 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். 

அதாவது, இன்று முதல் வருகிற பிப்ரவரி 12-ந்தேதி வரை துருக்கி மற்றும் வெளிநாட்டு பிரதிநிதி அலுவலகங்களில் துருக்கி நாட்டின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one week mourning in turkey for earthquake died


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->