#BAFTA2024 || விருதுகளை வாரி குவித்த "ஓப்பன்ஹெய்பர்".!! - Seithipunal
Seithipunal


பாஃப்டா 2024 விருது வழங்கும் நிகழ்ச்சியில் கிரிஸ்டோபர் நோலன் இயக்கிய 'ஒப்பன்ஹெய்மர்' படம் 7 விருதுகளை தட்டி தாக்கியுள்ளது. பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் பிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் (BAFTA) அமைப்பு ஆண்டுதோறும் திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் பாஃப்டா 2024 விருது வழங்கும் நிகழ்வு லண்டன் சவுத் பேங்க் சென்ட்ரலில் உள்ள ராயல் ஃபெஸ்டிவல் ஹாலில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஏராளமான ஹாலிவுட் பாலிவுட் மற்றும் பிரிட்டிஷ் நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் ஏழு விருதுகளுடன் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'ஒபன் ஹெய்மர்' திரைப்படம் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 5 விருதுகளை வென்று 'புவர் திங்ஸ்' திரைப்படம் அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது.

அதன்படி,

சிறந்த திரைப்படம் - ஒப்பன்ஹஎய்மர்

சிறந்த பிரிட்டிஷ் திரைப்படம் - புவர் திங்ஸ்

ஆங்கிலம் அல்லாத சிறந்த திரைப்படம் - தி ஸோன் ஆப் இண்டரெஸ்ட்

சிறந்த ஆவணப்படம் - 20 டேஸ் இன் மரியுபோல்

சிறந்த அனிமேஷன் படம் - தி பாய் அண்ட் தி ஹெரோன்

சிறந்த இயக்குனர் - கிறிஸ்டோபர் நோலன் (ஒப்பன்ஹெய்மர்)

சிறந்த அசல் திரைக்கதை - அனாடமி ஆஃப் எ ஃபால்

சிறந்த தழுவல் திரைக்கதை - அமெரிக்கா ஃபிக்ஷன்

சிறந்த நடிகை - எம்மா ஸ்டோன (புவர் திங்ஸ்)

சிறந்த நடிகர் - சிலியன் மர்ஃபி (ஒபன்ஹெய்மர்)

சிறந்த உறுதுணை நடிகை - டாவின் ஜாய் ராண்டால்ஃப்( தி ஹோல்டோவர்ஸ்)

சிறந்த உறுதுணை நடிகர் - ராபர்ட் டவுனி ஜூனியர் (ஒபன் ஹெய்மர்)

சிறந்த நடிகர்கள் தேர்வு - தி ஹோல்டோவர்ஸ்

சிறந்த ஒளிப்பதிவு - ஒப்பன்ஹெய்மர்

சிறந்த எடிட்டிங் - ஒப்பன்ஹெய்மர்

சிறந்த ஆடை அலங்காரம் - புவர் திங்ஸ்

சிறந்த சிகை அலங்காரம் & ஒப்பனை -புவர் திங்ஸ்

சிறந்த பின்னணி இசை - ஒப்பன்ஹெய்மர்

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - புவர் திங்ஸ்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - புவர் திங்ஸ்

சிறந்த பிரிட்டிஷ் அனிமேஷன் குறும்படம் - கிராப் டே

சிறந்த பிரிட்டிஷ் குறும்படம் - ஜெல்லிஃபிஷ் அண்ட் லாப்ஸ்டர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oppenheimer won 7 awards in bafta2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->