ஹஜ் பயணத்தில் தொடரும் சோகம்.. 1300 ஐ கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை..! - Seithipunal
Seithipunal


இஸ்லாமியர்களின் ஐந்து வாழ்வியல் கடமைகளில் ஒன்றாக இருப்பது ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதாகும். இந்த ஹஜ் பயணம் என்பது சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரமான மெக்கா நகருக்கு செல்லும் புனிதப் பயணமாகும். 

இந்த ஹஜ் புனித யாத்திரைக்கு உலகெங்கிலும் இருந்து லட்சக் கணக்கான இஸ்லாமிய யாத்திரீகர்கள்  ஆண்டுதோறும் செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு 18 லட்சம் இஸ்லாமியர்கள் மெக்கா நகருக்கு ஹஜ் யாத்திரைக்கு குவிந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு உலகம் முழுவதும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. மேலும் வெப்ப அலையும் உலகெங்கிலும் அதிகமாக வீசி வருகிறது. அந்த வகையில் மெக்கா நகரில் வீசி வரும் வெப்ப அலை காரணமாக இந்த ஆண்டு யாத்திரை சென்றுள்ள பலர் வெயில் தாங்காமல் சுருண்டு விழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சவுதி சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவிக்கையில், "இந்த ஆண்டு ஹஜ் யாத்திரீகர்கள் இறப்பு எண்ணிக்கை 1300 ஐ தாண்டியுள்ளது. இவர்களில் 83 சதவீதம் பேர் ஹஜ் பயணத்திற்கு பதிவு செய்யாமல், தங்குவதற்கான ஏற்பாடு இல்லாமல் நேரடி வெயிலில் நடந்து வந்துள்ளதால், இந்த இறப்பு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து அனுமதி இல்லாமல் யாத்திரை வந்த 1,40,000 பேர் உட்பட 5 லட்சம் பேருக்கு மெக்காவில் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. வெப்ப அலைகளில் இருந்து தங்களை எவ்வாறு காத்துக் கொள்வது என்று  தொடர்ந்து யாத்திரீகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்து வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Over 1300 Pilgrims Died in Hajj


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->