எத்தியோப்பியாவில் நிலச்சரிவு - 200 - க்கும் மேற்பட்டோர் பலி..!! - Seithipunal
Seithipunal



ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 200 - க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவின் தெற்குப் பகுதியில் திங்கட் கிழமையான நேற்று (ஜூலை 23) கனமழை பொழிந்தது. இதைத் தொடர்ந்து அங்கு கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுமார் 200 க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 81 பேர் பெண்கள் என்றும், 148 பேர் ஆண்கள் என்றும் தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் குவிந்த மக்கள், அங்கு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க முயற்சிகள் மேற்கொண்டனர். இதில் 5 பேர் மட்டும் உயிருடன் மீட்கப் பட்டுள்ளனர். இந்த துயர சம்பவம் எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து 450 கி. மீ தூரத்தில் உள்ள கெஞ்சோ-ஷாச்சா என்ற பகுதியில் தான் இந்த நிலச்சரிவு சம்பவம் நடந்துள்ளது. 

இந்நிலையில் ஆப்பிரிக்க கண்டத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட 2வது நாடு எத்தியோப்பியா என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 120 மில்லியன் மக்கள் அந்த நகரத்தில் வசிக்கின்றனர். ஏப்ரல் மற்றும் மே மாதம் எத்தியோப்பியாவில் மழைக் காலமாக உள்ளது. முன்னதாக கடந்த மே மாதமும் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்போது ஏற்பட்ட நிலச்சரிவில் முதலில் சிக்கியவர்களை மீட்கச் சென்றவர்கள் மீது மீண்டும் 2வது முறையாக மண் சரிந்ததால் அவர்களும் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 200 ஐ தாண்டியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Over 200 Peoples Died in Landslide in Ethiopia


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->