#பாகிஸ்தான் : பணவீக்கம் அதிகரிப்பால் உணவு பொருட்களின் விலை கடும் உயர்வு.!
Pakistan inflation rises to 38 percentage
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம், பண வீக்கம் மற்றும் அன்னிய செலாவணி குறைபாட்டால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் மே 9ஆம்தேதி இம்ரான்கானின் கைதுக்கு பிறகு ஏற்பட்ட உள்நாட்டு கலவரங்களால் நாட்டின் பொருளாதார நிலை மங்கத்தொடங்கியது.
இந்நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பாகிஸ்தானின் பணவீக்கம் 38%ஆக அதிகரித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை, மின்சாரம், எரிவாயு மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளது.
இதைத்தொடர்ந்து கடத்த ஏப்ரலில் 36.4 சதவீதமாக இருந்த பண வீக்கம் ஒரே மாதத்தில் 1.6 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் நுகர்வோர் பொருட்கள் மீதான விலை ஊரக பகுதியில் 52.4 சதவீதமும், நகரப் பகுதியில் 48.1 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானின் இந்த பணவீக்க சதவீதம் இலங்கையை விட அதிகமாகும். வரும் மாதங்களில் பணவீக்க சதவீதம் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சர்வதேச நாணய நிதியம் கோரிய நிதி மாற்றங்களின் ஒரு பகுதியாக அரசாங்கம் வலிமிகுந்த நடவடிக்கைகளை எடுத்த பிறகு, இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பணவீக்கம் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
English Summary
Pakistan inflation rises to 38 percentage