பாகிஸ்தான்! வெளியுறவுத்துறை அமைச்சராகிறார் முன்னாள் பிரதமரின் மகன்.!
Pakistan new foreign affairs minister
பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சராக பிலாவல் புட்டோ சர்தாரி பதவி ஏற்க உள்ளார்.
சமீபத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக இம்ரான்கான் ஆட்சியை இழந்தார். இந்நிலையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி இணைந்து ஆட்சியை பிடித்தது.
இதில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்றார்.
இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் மகனான மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ சர்தாரி பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சராக இரண்டு நாட்களில் பதவி ஏற்க உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜமான் கைரா உறுதி செய்துள்ளார்.
English Summary
Pakistan new foreign affairs minister