பாகிஸ்தானில் உடனடியாக தேர்தலை நடத்தவேண்டும்-இம்ரான் கான்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் பாகிஸ்தானில் இம்ரான் கானின் அரசு கவிழ்ந்தது மேலும் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமராக தேர்வு செய்யபட்ட ஷபாஸ் ஷெரீப் நேற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

அப்போது பேசிய ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டுமென முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தானில் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம் பிரதமராக யார் வர வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan should hold immediate elections Imran Khan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->