வெள்ளத்தால் சூழ்ந்துள்ள பாகிஸ்தான்: 1 கோடி குழந்தைகள் பாதிப்பு..!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து அந்நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. 

இந்த பாதிப்பு காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளதாக பாகிஸ்தான் பருவநிலைமாற்ற அமைச்சர் தெரிவித்தார். மழை தற்போது பெருமளவு குறைந்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. 

இதன் காரணமாக மீட்பு மற்றும் நிவாரண பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை கனமழை மற்றும் வெள்ளத்தால் 3.30 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இயற்கை பேரிடரில் இதுவரை 1,545 பேர் உயிரிழந்துள்ளனர். மலேரியா, டெங்கு போன்ற நீர் தொடர்பான நோய் பாதிப்பால் 90 ஆயிரம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுமட்டுமின்றி, இதுவரை பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 1 கோடியே 60 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இவற்றில் 34 லட்சம் குழந்தைகளுக்கு உடனடியாக உயிர் காப்பு உதவிகள் தேவைப்படுவதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. 

இதற்கு முன்னதாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு உதவ உலக நாடுகள் முன் வரவேண்டுமென ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரெஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan surrounded by floods 1 crore children affected


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->