பாகிஸ்தானில் மதவெறியர்களால் இந்துமதப் பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை! - Seithipunal
Seithipunal


இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில், இந்துப் பெண் கடத்தப்பட்டு, இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த காரணத்தினால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் தெற்கு சிந்து மாகாணத்தில் தான் இந்த சம்பவத்தில் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையாக உள்ள இந்த மதத்தை சேர்ந்த திருமணமான இந்துப் பெண் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியில், தன்னை ப்ராஹிம் மங்ரியோ, புன்ஹோ மங்ரியோ மற்றும் அவர்களது கூட்டாளிகள் கத்திச்சென்று, இஸ்லாமிய மதத்திற்கு மாறுமாறு மிராட்டினர்.

நான் அதற்க்கு மறுப்பு தெரிவிக்கவே என்னை பாலியல் வன்கொடுமை செய்த்தனர். அவர்களிடம் போராடி தப்பித்து வீடு திரும்பி உள்ளேன்" என்று பாதிக்கப்பட்ட அந்த பெண் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக உமர்கோட் மாவட்ட போலீசார் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை என்று அந்த பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். 

சிந்துவின் உள்பகுதியில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களான உமர்கோட், மிர்புர்காஸ், கோட்கி, கைர்பூர் பகுதிகளில்  இந்து மதத்தை சேர்ந்த இளம் பெண்களைக் கடத்தி கட்டாய மதமாற்றம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி இந்து மத நபர் ஒருவர் தெரிவிக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakisthan hindu young lady abused group of islam people


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->