ஒரே நாளில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான பாகிஸ்தான் பிரதமர் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ஒரே நாளில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான பாகிஸ்தான் பிரதமர் - நடந்தது என்ன?

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் உலகளாவிய நிதி ஒப்பந்தம் தொடர்பாக இரண்டு நாள் உச்சி மாநாடு நடைபெறுகிறது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு கடன் திட்டத்தை பெறுவதற்கான முயற்சியாக இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொள்வதற்காக வருகை தந்தார்.

அப்போது அங்கு மழை பெய்ததால் பெண் ஊழியர் ஒருவர் பாகிஸ்தான் பிரதமருக்கு குடைபிடிக்கச் சென்றார். ஆனால், ஷெபாஸ் ஷரீப் அந்த ஊழியரிடம் இருந்து குடையை வாங்கி, தான் மட்டும் தனியாக சென்றார். இதனால், அந்த பெண் மழையில் நனைந்தபடி பின்தொடர்ந்துச் சென்றார்.

இது தொடர்பான வீடியோவை பிரதமர் அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதனை பலரும் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். இந்த வீடியோவை பார்க்கும் பாகிஸ்தான் சமூக ஊடக பயனர்கள் தங்கள் பிரதமரின் இந்த நடவடிக்கையை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டனர். 

கூட்டத்தில் உலகத் தலைவர்களையெல்லாம் ஷெபாஸ் ஷெரீப் சந்தித்தார். ஆனால், இந்த சந்திப்புகள் தொடர்பான வீடியோக்களை விட, அவர் மாநாட்டிற்கு வந்தடையும் வீடியோதான் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakisthan prime minister snatching umbrella from woman officer vedio viral


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->