ஏரிக்குள் பாய்ந்த விமானம்! 23 பேரின் கதி என்ன! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் ஏடிஆர் 42-500 ரக விமானம் தரையிறங்கும் பொழுது மோசமான வானிலை காரணமாக ஏரிக்குள் விழுந்துள்ளது. இந்த விமானத்தை கேப்டன் புருஹானி ருபாகா என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக விமானியாக பணியாற்றியுள்ளார். இவருடன் முதன்மை அதிகாரி பீட்டர் ஓமண்டி என்பவரும் விமானத்தை இயக்கியுள்ளார். இந்த விமானம் 49 இருக்கைகள் கொண்ட சிறிய வகை உள்நாட்டு விமானம் ஆகும். 

தான்சானியாவின் வான்ஜா என்ற நகரில் இருந்து புகோபா என்ற நகருக்கு 49 பயணிகளுடன் விமானம் சென்ற பொழுது புகோபா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய நேரத்தில் மோசமான வானிலை காரணமாக விமானம் 100 மீட்டர் தொலைவில் உள்ள ஏரியில் விழுந்து மூழ்கத் துவங்கியுள்ளது.  

இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் 26 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்பு படையினர் விமானத்தை கயிறு கட்டி இழுத்து மீட்டு வருகின்றனர். இதுவரை உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Passenger plane flew into the lake in Tanzania


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->