உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்த வேண்டும்.! கால்பந்து ஜாம்பவன் பீலே, அதிபர் புதினுக்கு வேண்டுகோள்.!
Pele request to president putin
உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என்று கால்பந்து ஜாம்பவான் பீலே அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தொடர்ந்து 90 நாட்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இப்போரினால் உக்ரைனின் முக்கிய நகரங்கள் சேதம் அடைந்துள்ள நிலையில், 1000 கணக்கான வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் உக்ரைனின் பல நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வருகின்றது. இப்போரினால் உலக அளவில் பொருளாதாரமும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் மீதான போரை நிறுத்த வேண்டும் என ரஷ்ய அதிபர் புதினுக்கு கால்பந்து ஜாம்பவான் பீலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, இந்த படையெடுப்பு பொல்லாதது மற்றும் நியாயப்படுத்தவே முடியாதது. இந்த போர் வலி, பயம் மற்றும் வேதனையை தவிர வேற எதையும் தரப்போவதில்லை. எனவே இந்த படையெடுப்பை நிறுத்துங்கள் என்று அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
English Summary
Pele request to president putin