அமெரிக்காவிற்கு சுற்றுலா செல்ல 2024 வரை காத்திருக்க வேண்டிய நிலை.! காரணம் என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


அமெரிக்காவுக்கான சுற்றுலா விசா மற்றும் வருகையாளர் விசா நேர்காணலுக்கான காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் சுற்றுலாத்துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்ல விரும்புவர்கள் இன்றைய நாளில் விண்ணப்பித்தால் நேர்காணலுக்காக 2024ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் வருகையாளர் விசாவிற்கு காத்திருப்பு காலம் சென்னைக்கு 557 நாட்களாகவும், மும்பைக்கு 517 நாட்களாகவும், டெல்லிக்கு 581 நாட்களாகவும், கொல்கத்தாவிற்கு அதிகபட்சமாக 584 நாட்களாகவும் உள்ளது.

இதையடுத்து மாணவர் விசாவிற்கு காத்திருப்பு காலம் சென்னைக்கு 8 நாட்களாகவும், மும்பைக்கு 10 நாட்களாகவும், கொல்கத்தாவிற்கு இரண்டு நாட்களாகவும் உள்ளன.

மேலும் கோவிட் காலங்களில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் பணியாளர்களின் பற்றாக்குறை இதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People have to wait till 2014 to get visa from America


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->