பரபரப்பு! நாடாளுமன்றத்தில் வெடித்த மக்கள் போராட்டம்! துப்பாக்கி சூடு! 39 பேர் பலி! - Seithipunal
Seithipunal


கென்யாவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

கென்யா நாடாளுமன்றத்தில் சர்ச்சுக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்ததற்கு எதிராக கடந்த வாரம் போராட்டம் வெடித்தது. புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பலரும் நாடாளுமன்றத்தின் நுழைவு வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் நாடாளுமன்ற வளாகத்திற்கு நுழைய முயன்ற போது அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைக்கப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த விவகாரம் 27 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து கென்யா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு புதிய நிதி மசோதாவை திரும்ப பெறுவதாக அந்நாட்டு அதிபரின் வில்லியம் ரூட்டோ அறிவித்தார்.

இந்த நிலையில் அரசுக்கு எதிராக மக்கள் நாடாளுமன்றத்தில் நடத்திய போராட்டத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை மனித உரிமை ஆணையம் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் 361 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People protest in Kenya Parliament Shooting killed 39 people


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->