பெரு நாட்டை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை! பீதியில் மக்கள்.! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்க நாடான பெருவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. 

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.மேலும் நிலநடுக்கத்தின் போது பதிவான சிசிடிவி காட்சி அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் பூமியோடு சேர்ந்து குலுங்கும் காட்சிகளும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

இதே போல் வீட்டிற்குள் இருந்த மின்விளக்குகள், சேர், டேபிள் போன்ற பொருட்கள் நில நடுக்கத்தினால் குலுங்கின. இந்த நிலநடுக்கம் காரணமாக மலையில் இருந்த பாறைகள் சரிந்து பான் - அமெரிக்க நெடுஞ்சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். 

மேலும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Peru strong earthquake


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->