ரோமில் துப்பாக்கிச் சூடு - பிரதமரின் தோழி உட்பட 3 பேர் பெண்கள் பலி, 4 பேர் காயம்
PM friend including 3 woman killed shooting in Italy
இத்தாலியில் ஹோட்டல் ஒன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் பிரதமரின் தோழி உட்பட மூன்று பெண்களை சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இத்தாலியின் தலைநகர் ரோமின் வடக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் சங்கக் கூட்டம் அப்பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. அப்பொழுது இந்த கூட்டத்தில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டில் 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சந்தேகப்படும்படியான துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என் 57 வயதான கிளாடியோ காம்பி என்பரை கைது செய்தனர்.
அந்த சந்தேக நபர் அப்பகுதியை சேர்ந்தவர் என்றும், அவர் குடியிருப்பாளர்கள் சங்கத்துடன் தொடர் தகராறில் ஈடுபட்டார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த துப்பாக்கி சூட்டில் இறந்துபோன பெண்களில் நிகோலெட்டா என்பவர் எனது தோழி என்றும், அவருடன் இணைந்து இருக்கும் படத்தையும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
English Summary
PM friend including 3 woman killed shooting in Italy