அமெரிக்காவில் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போலியோ நோய் உறுதி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் போலியோ நோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது.

உலகில் கடந்த 1948 ஆம் ஆண்டில் இருந்து 1955 ஆம் வருடம் வரை போலியோ நோய் பாதிப்பு கடுமையாக பரவி உயிர்பலிகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு, போலியோ நோயை தடுக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் அந்த நோய் அதிகளவில் பரவவில்லை.

இருந்தபோதிலும் தற்போது வரை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கு போலியோ நோய் பரவிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் கடந்த 1979 ஆம் ஆண்டுடன் போலியோ நோய் மொத்தமாக ஒழிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு, 2013 ஆம் வருடத்தில் இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற 7 மாத குழந்தைக்கு போலியோ பாதிப்பு கண்டறியப்பட்டது.

அதன்பின், அங்கு போலியோ பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. இந்த நிலையில், மீண்டும் அமெரிக்க நாட்டில் ஒரு இளம் பெண்ணிற்கு போலியோ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அவர், வேறு எந்த நாட்டிற்காவது சென்று வந்தாரா? என்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Polio confirmed again after 9 years in America


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->