கிறிஸ்துமஸ் செலவீனங்களை குறைத்து உக்ரைன் மக்களுக்கு உதவ வேண்டும் - போப் பிரான்சிஸ் வேண்டுகோள் - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போரில் கிட்டத்தட்ட 7 மில்லியன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் 17 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உணவு மற்றும் அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் மற்றும் விருந்திருக்கு ஆகும் செலவினங்களை குறைத்து போரில் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு உதவ வேண்டுமென போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையடுத்து போரில் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்கள் பசியாலும், கடும் குளிராலும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு கிறிஸ்மஸ் கொண்டாடங்கள் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிறிஸ்துமஸ் சார்பாக நடத்தப்படும் அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் உக்ரைன் போரை நிறுத்துவதற்கு வலியுறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pope Francis request reduce Christmas expenses and help Ukraine people


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->