கிறிஸ்தவர்கள் செய்த கொடூரங்களுக்கு வெட்கித் தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - போப் பிரான்சிஸ்.! - Seithipunal
Seithipunal


போப் பிரான்சிஸ் கனடாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது கனாடாவின் மாஸ்வாசிஸ் நகரில்,  பழங்குடி மக்கள் சூழ்ந்திருக்க போப் பிரான்சிஸ் பேசினார்.

அப்போது போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளதாவது,

"கத்தோலிக்க பள்ளிக்கூடங்கள் இங்கிருந்த பழங்குடியினரின் மொழி மற்றும் கலாசாரம் அழிய காரணமாகியுள்ளன. பழங்குடியின மக்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் செய்த கொடூரங்களுக்கு வெட்கித் தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மன்னிப்பு கடந்த காலங்களில் வலிகளை அனுபவித்த பழங்குடி மக்களுக்கு சிறு மருத்தாகவும், பழங்குடியினருக்கு நடத்தப்பட்ட கொடுமைகளைக் கண்டறிவதற்கான விசாரணையை தீவிரப்படுத்தவும், உதவும்". என்று போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் கத்தோலிக்க பள்ளியில் படித்த முன்னாள் மாணவரான ஈவ்லின் கோர்க்மாஸ் தெரிவித்துள்ளதாவது, 

"நான் இந்த மன்னிப்புக் கோரலை கேட்க 50 வருடங்களாக காத்திருந்தேன். எனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வகுப்புத் தோழர்கள் மற்றும் எனது சமூகத்தைச் சேர்ந்த பலரும் இந்த மன்னிப்புக் கோரலைக் கேட்க முடியவில்லை. 

கத்தோலிக்க பள்ளிகளில் நடத்தப்பட்ட கொடூர கொடுமைகளால் அந்த வேதனையுடன் வாழ முடியாமல் அவர்கள்  தங்கள் வாழ்வை அழிந்து கொண்டார்கள்". என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pope Francis say apologize for atrocities committed by Christians


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->