மோசமான நிலையில் போப்!!! மழையை பொருட்படுத்தாமல் பிரார்த்தனை செய்யும் நல விரும்பிகள்!!!
Pope in a bad state Well wishers praying despite the rain
கத்தோலிக்கத் திருச்சபை தலைவர் திருத்தந்தை போப் பிரான்சிஸ் வயிறு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். இவர் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். இந்நிலையைத் தற்போது அவரது உடல்நிலை மெல்லத் தேறி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸ்:
இந்த நிலைக் குறித்து போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டி அவரின் நல விரும்பிகள் ஆயிரக்கணக்கானோர் பிரார்த்தனை செய்த சம்பவம் வாடிகன் நகரில் அரங்கேறியது. இதைத்தொடர்ந்து வாடிகன் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம் அருகே மக்கள் ஒன்று கூடி போப் பிரான்சிஸ் விரைவில் குணமடையவேண்டித் தொடர்ந்து பிரார்த்தனைச் செய்தனர். இந்தப் பிரார்த்தனையின் போது, மழை மற்றும் குளிர்ந்த வானிலையைக் கூட பொருட்படுத்தாமல் கையில் ஜெபமாலையை எண்ணியவாறு சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாகப் பிரார்த்தனையை தொடர்ந்து செய்தனர்.
பிரார்த்தனை:
மேலும் 88 வயதான போப் பிரான்சிஸ் அவர்கள் சிறுநீரகப் பிரச்சனை மற்றும் நிமோனியா காரணமாக சிகிச்சைப் பெற்று வருகிறார். ஏறத்தாழ 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பிரார்த்தனை செய்ய ஒன்று கூடிய நிலையில், விடாமல் மழைப் பெய்தும் அவர்கள் குடைகளை விரித்து அங்கேயே நின்று கொண்டு பிரார்த்தனையைத் தொடர்ந்தனர். போப் பிரான்சிஸ் மீது அளவு கடந்த மரியாதையும் அவர் குணமடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தையும் கருத்தில் கொண்டு இது போன்ற பிரார்த்தனையை அவர்கள் செய்துள்ளதாகத் தெரிகிறது.
English Summary
Pope in a bad state Well wishers praying despite the rain