ஆபாச படத்தில் சாத்தான் இருக்கு! போப் பிரான்சிஸின் கண்டுபிடிப்பு!!
Porn videos need to ban said Pope Francis
வாடிகன் நகரில் போப் பிரான்சிஸ் உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸிடம் டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளத்தை எப்படி நல்ல விதத்தில் உபயோகப்படுத்த வேண்டும் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த போப் பிரான்சிஸ் இணையத்தில் வரும் ஆபாசங்கள் தீமையை விளைவிக்கிறது. அதன் மூலம் ஏற்படும் ஆபத்தை பற்றி எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு போதகர்கள், கன்னியாஸ்திரிகள் போன்றவர்கள் கூட தப்ப முடியவில்லை. ஆபாச படங்களிலிருந்து சாத்தான்கள் வெளியே வருகிறது. மனதுக்குள்ளே செல்கிறது. போதகர்களின் இதயத்தை பலவீனமடைய செய்கிறது என பேசியுள்ளார். கடந்த ஒரு வருடங்களாக போப் பிரான்சிஸ் ஆபாச படங்களால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து பேசி வருகிறார்.
டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளங்களை நல்ல முறையில் உபயோகிக்க வேண்டும். அதில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு தீமைகளை ஒதுக்க வேண்டும். அதிக நேரம் இதில் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஆபாச படங்களை போனிலிருந்து நீக்கினால் தூண்டல்கள் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.
English Summary
Porn videos need to ban said Pope Francis