மீண்டும் மீண்டுமா! 4,000 பேரை காவு வாங்கிய ஆப்கானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! - Seithipunal
Seithipunal


கடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹெராட்டிலிருந்து 40 கி.மீ தொலைவில் வட மேற்கு திசையில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 5 முறை அடுத்தடுத்து 4.6-6.3 ரிக்டர் அளவில் பதிவானதால் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில் நிலநடுக்கம் காரணமாக வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

பேரழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 4000-த்தை தாண்டி உள்ளது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் பேரிடர் மீட்புத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில் "4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 10,000 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலநடுக்கம் காரணமாக 1,320 வீடுகள் சேதமடைந்துள்ளது" என தெரிவத்திருந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6.11 மணியளவில் ஏற்கனவே நிலநடுக்கம் ஏற்பட்ட ஹெராட் பகுதியில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது. இன்று ஏற்பட்ட நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

powerful earthquake again in Afghanistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->