தைவான் நாட்டு கடலில் நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் மையம்!
Powerful earthquake struck off the east coast of Taiwan
ரிக்டர் அளவில் 6.6 அலகாக இருந்ததால் சுனாமி எச்சரிக்கை இல்லை !
தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டைட்டங் நகரத்திற்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகாக பதிவாகியுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. தைவான் நாட்டில் நிலநடுக்கம் ரிக்டர் அளவு 7.0 அலகுகளுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படும்.
நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளில் உள்ள கட்டுமானங்கள் கடுமையாக குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
English Summary
Powerful earthquake struck off the east coast of Taiwan