கல்வி என்பது சமூகத்தை மேம்படுத்துவதற்கான கருவி - திரவுபதி முர்மு.! - Seithipunal
Seithipunal


குடியரசுத் தலைவர் திரவுபதி முா்மு மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக நேற்று முர்மு நியூசிலாந்து நாட்டிற்கு வந்தடைந்தாா். இந்த வருகையின்போது அவருக்கு நியூஸிலாந்தின் 'ராயல் காா்டு ஆப் ஹானா்' வழங்கப்பட்டது.

இதையடுத்து நியூசிலாந்தின் பிரதமா் கிறிஸ்டோபா் லக்சனை திரவுபதி முா்மு சந்தித்தாா். கல்வி, வா்த்தகம் மற்றும் கலாசாரம் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினா்.

இந்த நிலையில், வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்து சா்வதேச கல்வி மாநாட்டில் திரவுபதி முா்மு கலந்துகொண்டு உரையாற்றினாா். அப்போது அவர் பேசியதாவது, 'கல்வி என்பது ஒரு தனிமனிதனின் முன்னேற்றத்துக்கானது மட்டுமல்ல; 

அது சமூகம் மற்றும் தேசத்தை மேம்படுத்துவதற்கான ஒரு கருவி. நியூசிலாந்தில் சா்வதேச மாணவா்களில், இரண்டாவதாக அதிக எண்ணிக்கையில் 8,000 இந்திய மாணவா்கள் தரமான கல்வியைப் பெற்று வருகின்றனா்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

president droubati murmu speech in new zealand


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->