ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்விக்கும் - மேக் இன் இந்தியா திட்டத்திற்கு மோடி பாராட்டு.!
prime minister modi hails make in india scheame
ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்விக்கும் - மேக் இன் இந்தியா திட்டத்திற்கு புகழாரம் தெரிவித்த மோடி.!
நாட்டில் உற்பத்தி துறையை மேம்படுத்தும் வகையில், 'இந்தியாவில் தயாரிப்போம்' அதாவது "மேக் இன் இந்தியா" என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் உள்நாட்டு தயாரிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், மொசாம்பிக் நாட்டிற்குச் சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு போக்குவரத்து அமைச்சருடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரெயிலில் பயணம் செய்துகொண்டுள்ளார்.
இது குறித்த தகவலை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார். அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த பதிவை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 'இந்த நிகழ்வு ஒவ்வொரு இந்தியரையும் மகிழ்விக்கும்! "இந்தியாவில் தயாரிப்போம்" (மேக் இன் இந்தியா) என்றத் திட்டம் தொடர்ந்து உலக அளவில் முன்னேறி வருகிறது' என்றுக் குறிப்பிட்டு இருந்தார்.
அதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடி மும்பையில் நடைபெற்ற சிறுதானிய உணவு திருவிழாவை தனது டுவிட்டர் தளத்தில் பாராட்டி இருந்தார். இது பாராட்டுக்குரிய முயற்சி என்று அவர் குறிப்பிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தின் விதர்பா பிராந்தியத்தில் 6 சாலை மேம்பாலங்கள் திறக்கப்பட்டதற்கும் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.
English Summary
prime minister modi hails make in india scheame